Wednesday, December 29, 2010

2010 – ராஜபக்ச சந்தித்த தலைக்குனிவு

‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி, நாடுகளுக்கு இடையே போர் நடந்தால் கூட பயன்படுத்தக் கூடாது என்று உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட கொத்துக் குண்டுகள், வெப்பக் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் ஆகியவற்றை தன் நாட்டு மக்கள் மீது வீசி, இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொன்றொழித்த இனப் படுகொலை அரசின் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இந்த ஆண்டில் பல முனைகளில் தலைகுனிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

2009ஆம் ஆண்டு மே 16,17,18ஆம் தேதிகளில் மட்டும் 50 ஆயிரம் தமிழர்களை கொன்று குவித்து போரை முடித்த மகிந்த ராஜபக்சவுக்கு, உலகத்தை அதிர்ச்சியுறச் செய்த இந்த படுகொலையை தடையின்றி நடத்தி முடிக்க தனக்கு உதவிய தெற்காசிய வல்லரசுகளான இந்தியாவும், சீனாவும், தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வழங்கி ஆதரவளித்த இரஷ்யாவும் அளிக்கும் ஆதரவு மட்டும் தன்னையும், தனது நாட்டையும் காத்திட போதுமானது அல்ல என்று உணரவைத்த ஆண்டு இது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகை இழப்பு

“உங்கள் நாட்டு மக்கள் மீது தொடுத்த யுத்தத்தில் நடந்த போர்க் குற்றங்களை முறையாக விசாரிக்க பன்னாட்டு விசாரணைக்கு ஒப்புக் கொள்ள வேண்டும்” என்று 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்தின் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி, தங்களுடைய கோரிக்கை ஏற்கப்படவில்லையெனில், 6 மாத காலத்தில் இலங்கையின் உற்பத்திப் பொருட்களின் இறக்குமதி மீது விதிக்கப்படும் தீர்வைக்கு தாங்கள் அளித்துவரும் மானியத்தை நிறுத்துவோம் என்று அறிவித்தது. ஏனெனில், எந்த ஒரு மூன்றாம் உலக நாட்டிற்கும் இப்படிப்பட்ட இறக்குமதி தீர்வைச் சலுகை அளிப்பதற்கு ஐரோப்பிய ஆணையம் விதித்துள்ள நிபந்தனைகளில் முக்கியமானது, அந்த நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டும், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே.

சிங்கள பேரினவாதம் என்பதைத் தவிர ஜனநாயகம் என்ற ஒன்றை மருந்திற்கும் அறியாத சிறிலங்க அரசியல்வாதிகளுக்கு, மனித உரிமை என்பது சிங்கள மக்கள் உரிமை என்பதைத் தவிர வேறு என்ன தெரியும்? எனவே எதிர்பார்த்தைப் போல் ஐரோப்பிய ஒன்றிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாது என்று ராஜபக்ச மறுக்க, அந்நாட்டின் ஏற்றுமதிக்கு, குறிப்பாக ஆயத்த ஆடைகள் ஏற்றுமதிக்கு அளித்துவந்த தீர்வை மானியத்தை இரத்து செய்வதாக ஐரோப்பிய ஆணையம் அறிவித்தது.

இந்த முடிவை மேற்கொள்வதற்கு முன்னர், அது தொடர்பாக தன்னளவில் ஒரு பெரும் விசாரணையை நடத்தியது ஐரோப்பிய ஒன்றியம். ஐரோப்பிய ஆணையத்தின் வர்த்தக பேச்சாளர் கிரிஸ்டியன் ஹோமான் இவ்வாறு கூறினார்; “இலங்கையில் நிலவும் மனித உரிமை சூழல் குறித்து விரிவாக புலனாய்வு செய்தோம். குறிப்பாக, ஜி.எஸ்.பி.+ வரிச் சலுகையை பெறுவதற்கு அடிப்படையான பன்னாட்டு மனித உரிமை தரங்களை மதிப்பது என்று அளித்த உறுதிமொழியை சிறிலங்க அரசு பாதுகாக்கிறதா என்று பார்த்தோம். சிறிலங்க அரசு இந்த விடயத்தில் மிகவும் பின்தங்கியுள்ளதையே விசாரணை அறிக்கை காட்டுகிறது” என்று தெளிவாக விளக்கிய பிறகே இறுதி அறிவிப்பை வெளியிட்டது.

இலங்கைக்கு ஆண்டிற்கு சராசரியாக 3.47 பில்லியன் டாலர்கள் அளவிற்கு அந்நியச் செலாவணியை கொண்டு வருவது ஆயத்த ஆடை ஏற்றுமதியே. இதற்கு அடுத்த இடத்தில் 1.2 பில்லியன் டாலர்கள் அளவிற்கு தேயிலை ஏற்றுமதி இருக்கிறது. இவைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அளிக்கும் தீர்வை மானியம் மட்டும் 100 மில்லியன் டாலர்களுக்கு மேல்! இதனை இழந்துள்ளதால் ஏற்றுமதியை இழந்துள்ளது இலங்கை.

இன்றைக்கு அந்நாட்டின் வர்த்தகப் பேரவையின் தலைவர், ஏற்றுமதியை அதிகரிக்க அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த நிலை நீடித்தால் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றியபோது, எங்களுடைய நடவடிக்கையின் மீது வினா எழுப்ப இவர்கள் யார் என்று திமிராக கேட்ட சிறிலங்க அரசியல்வாதிகள், இப்போது ‘எங்களுக்கு பதில் அளிக்க ஒரு வாய்ப்புத் தாருங்கள்’ என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற வாசலில் குனிந்து கொண்டு கோரிக்கை விடுக்கிறார்கள்!

தமிழக மக்கள் முறியடித்த ஐஃபா விழா

உலகமே போர்க் குற்றவாளி என்று விரல் நீட்டி குற்றஞ்சாட்டிவந்த நிலையிலும் வாரியணைத்து வாழ்த்திட அருகே இந்தியா இருக்க கவலை ஏன்? என்று இருமாந்திருந்த அதிபர் மகிந்த ராஜபக்ச, தனது நாட்டை அமைதிப் பூமியாக காட்டவும், அதன் மூலம் கிழந்து தொங்கிக் கிடக்கும் தனது நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த சுற்றுலாவைப் பெருக்கவும் திட்டமிட்டு, மும்பையின் திரை நட்சத்திரங்களை வைத்து ஒரு பெரும் விழாவை நடத்தி உலகத்தின் பார்வை திசை திருப்ப முயன்றார். அதுவே இந்தியா சர்வதேச திரைப்பட விழா (India International Film Festival - IIFA) ஐஃபா.

இந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்துவரும் அமிதாப் பச்சனை ஐஃபா விழாவின் தூதராக வைத்து அவர் ஆட முற்பட்ட பன்னாட்டு ஏமாற்று நாடகத்தை உரிய நேரத்தில் உணர்ந்த தமிழ் உணர்வாளர்கள், அதற்கு எதிரான ஒரு பெரும் பிரச்சார திட்டத்தை உருவாக்கி, சென்னையிலும், மும்பையிலும் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்த அமிதாப்பும், அவருடைய மகன் அபிஷேக் பச்சனும், அவரது மனைவி ஐஸ்வர்யா ராயும் ஐஃபா விழாவை புறக்கணிப்பதாக அறிவித்தனர். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள திரையுலகத்தினரும் புறக்கணித்தனர். ஐஃபா விழாவில் கலந்துகொள்ளும் நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள் தென்னாட்டில் திரையிட அனுமதிக்க முடியாது என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அறிவிக்க, சில இந்தி நடிகர், நடிகைகளின் துணையுடன் நடந்த ஐஃபா விழா படுதோல்வியில் முடிந்தது.
அது மட்டுமல்ல, அந்த விழாவை ஒட்டி, இந்தியாவின் தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பான ஃபிக்கியின் முழு ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட உலக வர்த்தக மாநாடும் தோல்வியில் முடிந்தது. இது சிறிலங்க அரசிற்கு அவமானத்தையும், பெரும் நிதியிழப்பையும் ஏற்படுத்தியது மட்டமின்றி, தமிழ்நாட்டின் எதிர்ப்பு எத்தனை வலிமையானது என்பதை சிறிலங்க அரசுத் தலைமைக்கு உணர்த்தியது.

ஐ.நா.அவையில் கேட்பதற்கு யாருமில்ல

ஆனாலும் தனது பெருமையை இந்திய, சீன எல்லையைத் தாண்டி நிலைநாட்டுவதில் முனைப்பாக இருந்த மகிந்த ராஜபக்ச, ஐ.நா.அவையில் உரையாற்றக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள மிகுந்த பிரயாசையுடன் நியூ யார்க்கிற்குப் புறப்பட்டார். அன்றைய தினம், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பேசிய பிறகு ராஜபக்ச பேச வேண்டும். ஒபாமா பேசியபோது உலக நாடுகளின் தூதர்கள் அனைவரும் அவையில் இருந்து கவனத்துடன் கேட்டனர். அவர் பேசி முடித்துவிட்டு வெளியேறியதும், அடுத்துப் பேச ராஜபக்ச மேடையேறியபோது, அவையே காலியாக இருந்தது. அப்போதுதான் ராஜபக்சாவிற்கு தனது ‘பெருமை’ சர்வதேச அளவில் எந்த அளவிற்கு கொடி கட்டிப் பறக்கிறது என்பது.

அதன் பிறகு உலகத் தலைவர்கள் பலரை தான் அளித்த விருந்திற்கு அழைப்பு விடுத்தார். வந்தவர் ஒரே ஒருவர்தான், அவர் ஈரான் அதிபர் அஹமதிநேஜாத். அவரும் 20 நிமிடம் இருந்துவிட்டு வெளியேறினார். இவரை எந்த ஊடகமும் திரும்பிப் பார்க்கவில்லை, அவ்வளவு புகழ்!

உலகப் புகழ் பெற்ற லண்டன் விஜயம்!

உலக நாடுகளில் எந்த ஒரு தலைவருக்கும் இப்படி ஒரு வரவேற்பை சந்தித்திருக்க மாட்டார்கள். விமான நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்குச் சென்று, வேறு எங்கும் தலை காட்ட முடியாமல், தனது நாட்டுத் தூதரகத்தில் பாதுகாப்பாக அடைக்கலம் புகுந்து, பிறகு பங்கேற்க வந்த நிகழ்ச்சியும் இரத்து செய்யப்பட்டு, மீண்டும் விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட பெருமை மகிந்த ராஜபக்சவிற்கு மட்டுமே கிடைத்தது.

‘எங்கள் இனத்தை அழித்தொழித்த இனப் படுகொலையாளனை ஆக்ஸ்போர்டில் பேச அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறி, ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த பல பத்தாயிரக்கணக்கான தமிழர்கள், லண்டனில் நிலவிய கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இரவு பகல் பாராமல் ஆர்ப்பாட்டம் நடத்தியது இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் மட்டுமின்றி, உலக நாடுகளிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்களின் போராட்டத்தின் நியாயத்தை உலகம் மேலும் ஆழமாக உணர வைத்தது.

பெண்கள், குழ்ந்தைகள், பெரியவர்கள் என்று அந்தக் குளிரில் வீட்டில் முடங்கிக்கிடக்க வேண்டியவர்களெல்லாம் ஒன்று திரண்டு நடத்திய ஆர்ப்பாட்டம், ராஜபக்சவை தலை குனிய வைத்தது.

தெற்காசிய வல்லரசுகள் தனக்கு பாதுகாப்பாக இருக்கின்றன. அந்த ஆதரவு போதும், அவைகளைத் தாண்டி எந்த வல்லரசும் அல்லது ஐ.நா.வும் தன்னை நெருங்கிவிட முடியாது என்ற நினைத்திருந்த மகிந்த ராஜபக்சவை, இந்த ஓராண்டில் தமிழர்கள் துரத்தி, துரத்தி தமிழினப் படுகொலைக்கு நியாயம் கோரியது அவர்களின் விடுதலை போராட்டத்தில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

தங்கள் நியாயமான போராட்டத்தை அழிக்க முற்பட்ட அரச பயங்கரவாதத்தை எதிர்த்து அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடியபோது, உலக நாட்டு அரசுகளின் துணையுடன் அதனை பயங்கரவாதமாக சித்தரிக்க முடிந்த மகிந்த ராஜபக்ச அரசிற்கும், அதற்கு துணை நின்ற இந்திய, சீன வல்லாதிக்கங்களுக்கும், நிராயுதபாணியாக தமிழ் மக்கள் ஒன்று திரண்டு நடத்திய ஆர்ப்பாட்டங்களை, போராட்டங்களை எதிர்கொள்ளவும் முடியவில்லை, பதில் கூறவும் இயலவில்லை!

தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டம் என்பது ஆயுதங்களையும், அரசுகளையும் விட வலிமையானது என்பது இந்த ஆண்டில் நிரூபணமானது.


நன்றி: தமிழ் வெப்துனியா

Sunday, December 26, 2010

மன்மதன் அன்பு படத்தில் செருப்படி வாங்கிய ஈழத் தமிழன்

தெனாலியில் ஈழத் தமிழனை பயந்தாங்கொள்ளியாக காட்டி சந்தோஷப்பட்ட கமல், மன்மதன் அம்புவில் அவனை செருப்பால் அடித்திருக்கிறார். அதுவும் ஒரு நடிகையின் கையால்.


ஏர்போர்ட்டில் வந்திறங்கும் த்ரிஷாவை ஈழத் தமிழரான டாக்சி டிரைவர் ஒருவர் சந்திக்கிறார். "மேடம்! உங்க கால் செருப்பாகக்கூட நடிக்கத் தயாராக இருக்கேன்" என்று வாலண்ட்ரியாக முன் வந்து தன்னை இழிவுபடுத்திக் கொள்கிறார்.

படத்தின் இறுதியில் வரும் இதே ஈழத் தமிழர், த்ரிஷாவிடம் செருப்படியும் வாங்குகிறார். அப்போது, "மேடம்! உங்க செருப்பாகூட நடிக்கத் தயார்னுதான் சொன்னேன். செருப்படி வாங்கறேன்னு சொல்லலை" என்று மீண்டும் தன்னை அசிங்கப்படுத்திக்கொள்கிறார். இதற்கு முன்பாக, இதே நபர் டோப்பா(விக்) தலையுடன் வந்து அதுவும் கழற்றப்பட்டு அவமானப்படுகிறார்.

 ஈழத் தமிழனுக்கு சூடு, சொரனை இருந்தால் அவர்கள் வாழும் நாடுகளில் இந்தப் பேடிப்பயல் படத்தை திரையிட விடக்கூடாது. செய்வார்களா?


 



நிச்சயம் பார்க்கவேண்டிய சுவிஸ் மாவீரர் நாள் உரை: (வீடியோ இணைப்பு)

Saturday, December 25, 2010

புலிகளை உயிர்ப்பிக்க வைக்கும் முனைப்புக்களின் பின்னணியில்…

2009 ஆண்டு மே 18 – 19களில் விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றாக அழிக்கப்பட்ட தாக அல்லது வேரோடு பிடுங்கி எறியப்பட்டதாக அல்லது துடைத்தெறியப் பட்டதாக இலங்கை அரசாங்கம் வெற்றி விழாக்களை கொண்டாடியது.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது மூத்த தளபதிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டதாக பெரும் பட்டியலையே இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் படங்களுடன் பட்டியலிட்டன.

ஆரம்பத்தில் 17 ஆயிரம் புலிகள் சரணடைந்தார்கள் எனத் தொடங்கி இப்போ 9 ஆயிரம் புலிகள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்கள் எனவும் கூறிவருகிறது. சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட புலிகளின் மூத்த தளபதிகள், போராளிகள் பலருக்கு என்ன நடந்தது என்பது பற்றி முன்னுக்குப் பின் முரணான தகவல்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் கொல்லப்பட்டதான ஆதாரங்கள் இந்திய அரசிடம் வழங்கப்பட்டதாக இலங்கை தெரிவித்து வந்தது. நீண்ட இழுபறியின் பின் ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் இருந்து இருவரது பெயர்களும் நீக்கப்பட்டன. இவர்கள் இருவரும் மரணம் அடைந்ததாக கூறி இந்திய தடா நீதிமன்ற நீதிபதி தட்சணாமூர்த்தி இருவரது பெயர்களையும் வழக்கில் இருந்து விடுவிக்குமாறு தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பை இந்திய சீ.பீ.ஐயின் ஆலோசனைக்கு அமைவாக மேற்கொண்டதாக 2010 ஒக்டேபர் 25 – 26ஆம் திகதிகளில் இந்தியாவில் வெளிவந்த ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலைவழக்கில் இருந்தும் ஏற்கனவே இவர்களது பெயர்களை இலங்கை நீதிமன்றம் நீக்கியிருந்தது.

இப்படி இருக்க விடுதலைப் புலிகளையும் அந்த அமைப்பின் முக்கியஸ்தர்களையும் இப்போ மீண்டும் உயிர்த்தெழ வைப்பதற்கு இந்திய இலங்கை புலனாய்வு மட்டங்கள் செய்திகளை அவிழ்த்து விட ஆரம்பித்துள்ளன.

அண்மையில் இந்திய புலனாய்வு தரப்புகள் அந்த நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் சிதம்பரம், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரை விடுதலைப் புலிகள் அமைப்பினர் கொல்ல திட்டமிட்டு இருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்தன.

இப்போ இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளமும் புதிய செய்தி ஒன்றை அவிழ்த்து விட்டிருக்கிறது.
அண்மையில் கைதான தாவூத் இப்ராஹிம் குழுவினருக்கும் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் புதிய தகவல்கள் வெளி வந்ததாகவும் தெரிவித்துள்ளது.

அதில் இறுதி யுத்தத்தில் புலிகள் தரப்பில் இருந்து தப்பிச் சென்றவர்கள் பெருந்தொகையான ஆயுதங்களையும் தம்முடன் எடுத்துச் சென்றதாகவும் தாவூத் இப்ராஹிம் குழுவின் முக்கிய புள்ளியான மிர்ஸா பெய்க் இடம் நடாத்தப்பட்ட விசாரணைகளிலிருந்து இந்தத் தகவல்கள் வெளிவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டும் அல்லாமல் யுத்தம் நிறைவுற்ற பின்னரும் கூட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் தலைமறைவாக இருந்து விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பியிருப்பதாகவும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.
மிர்சா பெக்கிடமிருந்து பொட்டம்மான் பற்றிய தகவல்களையும் பெற்றுக்கொள்வது தொடர்பான விசாரணைகளை இந்தியப் புலனாய்வுத்துறை மேற்கொண்டுள்ள போதிலும், அவற்றின் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை எனவும் விடுதலைப் புலிகளின் வலையமைப்பு தொடர்பாக அவர் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ள போதிலும், பாதுகாப்புக் கருதி அவற்றை வெளியிட முடியாதுள்ளதாகவும் மும்பைப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்ந்து செல்கின்றது.

இதே பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் பின்னோக்கிச் சென்றால் விடுதலைப் புலிகளை முற்றாக நிர்மூலமாக்கியதாக வெளியிட்ட வீரகாவியங்கள், செய்திகள், தகவல்கள் என்பவற்றை பார்வையிட முடியும்.

எனினும் இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் முன்பு பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட வீரகாவியங்களை விமர்சித்து வந்த நம்மவர்கள் இப்போ இந்த தகவல்களைப் பார்த்து புழகாங்கிதம் அடைந்து நம்பகரமான தகவல்கள் எனக் கூறுவதும் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப்பிரிவின் தலைவர் பொட்டு அம்மானும் தப்பிச் சென்றவர்களில் இருக்கலாம் எனக் கூறி பரபரப்படைவதும் கிளுகிளுப்படைவதும் துர்ப்பாக்கியமே. அதுவும் இலங்கை அரசாங்கத்தினதும் அதன் பாதுகாப்பு அமைச்சு மற்றும் புலனாய்வு ஜாம்பவான்களின் உள்நோக்கம் தெரியாது யாவற்றையும் வியாபாரமாக்குவது வேதனையே.

உண்மையில் இலங்கை இந்திய மட்டங்களில் விடுதலைப் புலிகளை உயிர்ப்பிக்க வைக்கும் முனைப்புக்களின் பின்னணியில் – உள்ளக, பிராந்திய, சர்வதேச அரசியல் இலக்குகள் என்ன என்பதை சற்று ஆராய்ந்து பார்ப்பது அவசியம் ஆகும்.

இலங்கை அரசினால் விடுதலைப்புலிகளுக்கெதிராக தொடுக்கப்ட்ட இறுதி யுத்தத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் குற்றச்சாட்டுக்கள் வலுப் பெற்று வருகின்றன. இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகள் போராளிகள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கடும் சித்திரவதைகளுக்குள்ளாகி கொல்லப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் உள்ளிட்ட படையினரிடம் அகப்பட்ட நூற்றுக் கணக்கான பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் வதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டதாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

சனல் 4 உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் காணொளிகளாகவும் ஒளிப்படங்களாகவும் இலங்கைப் படையினர் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை வெளியிட்டு வருகின்றன. விடுதலைப் புலிகளுக்கெதிரான இறுதி யுத்தத்தின் போது இலங்கைப் படையினர் மேற்கொண்ட யுத்தக் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் பிரித்தானியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அரசியல் உயர் மட்டங்களில் இருந்து மீண்டும் மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தினால் இலங்கைப் படைகளின் யுத்தக் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆராய்வதற்கான நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவை இலங்கை எல்லைக்குள் நுழைய விடுவதில்லை என்ற அரசாங்கத்தின் அழுங்குப்பிடி இப்போ தகர்ந்து இப்போ உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழுவைச் சந்திக்க முடியும் என்ற சமிக்ஞை காட்டப்பட்டு உள்ளது. இது இலங்கை அரசாங்கம் ராஜதந்திர மட்டத்தில் அடைந்த மிகப் பெரிய தோல்வி என பங்காளிக் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய உள்ளட்ட கட்சிகளும் அரசாங்கத்தின் நெருக்கமானவர்களும் தெரிவித்து வருகின்றனர்.

தவிரவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பிரித்தானிய விஜயத்தின் போது அவருக்கு ஏற்பட்ட அதி உச்ச நெருக்கடிகள், அவமதிப்புகள், நாட்டின் தலைவர் ஒருவர் எதிர்கொள்ளக் கூடாத கரிபூசல்கள் என்பன உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.

சர்வதேச ரீதியாக இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டு வரும் பாரிய அழுத்தங்களின் எதிரொலிகள் இந்தியாவிலும் கேட்கத் தொடங்கியுள்ளன. பெங்களுர் சென்ற இலங்கை அமைச்சர்கள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து நாடு திரும்ப வேண்டியேற்றபட்டது.
பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள் இலங்கை ஜனாதிபதியை திருப்பி அனுப்ப முடியுமானால் தமிழகத்தின் 6 கோடி தமிழர்களால் ஏன் எதனையுமே செய்ய முடியாதுள்ளது என்ற கேள்விகள் தமிழகத்தை துளைக்க ஆரம்பித்து விட்டன. இவை பெருமெடுப்பில் இந்திய அரசியலில் தாக்கத்தை உண்டு பண்ணாவிட்டாலும் ஆங்காங்கே அதிர்வுகளை சலசலப்பை உண்டுபண்ணிய வண்ணம் இருக்கும் என்பதனை இந்திய ஆளும் தரப்பினரும் புலனாய்வு மட்டங்களும் நன்கு அறிந்தே வைத்திருக்கின்றன.

இவை ஒருபுறம் இருக்க உள்நாட்டில் புலிப் பூச்சாண்டி, யுத்தப் பேய் என அரசியலை ஓட்டிக் கொண்டிருந்த மகிந்த அரசாங்கம் இப்போ ஏற்பட்டு இருக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுகின்றது. அதன் ஒரு வெளிப்பாடே ஜனாதிபதியின் மூத்த சகோதரரது 20.12.10 திங்கட்கிழமை ஆற்றிய உரை.

‘மக்களின் வயிறு உணர்வு என்ற வகையில் எதனையும் செய்ய தவறினால், துறைமுகங்கள், விமான நிலையங்கள், வீதிகள் நிர்மாணிப்பதில் எந்த பயனுமில்லை. முன்னர், அம்பாந்தோட்டை வருவதற்கு அச்சமாக இருக்கும். தற்போது மிகவும் அழகாக இருக்கிறது. துறைமுகத்தை பார்க்க முடியும். விமான நிலையத்தை பார்க்க முடியும். ஜனவரி மாதம் வந்ததுடன் கிரிக்கட் போட்டியை காணலாம்.
எது எப்படியிருந்த போதிலும் தேங்காய், சீனி, வெங்காயம், அது இதுவொன அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. நான் கடைக்கு செல்வதில்லை. எனினும் நேற்றிரவு வீடுகளுக்கு சென்று, அந்த மக்களிடம் விசாரித்தேன்.
‘ஐயோ சபாநாயகர் அவர்களே! வெங்காயம் வாங்க சென்றேன் 125 ரூபா, 150 ரூபா எனக் கூறுகின்றனர். சீனி வாங்க சென்ற போது 100 ரூபா என கூறினர். இதில் சிரமங்கள் இருக்கின்றன’ என மக்கள் கூறியதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாந்தோட்டையில் நடைபெற்ற காணி உறுதிகளை வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இதன் மூலம் முதலாவது ஜனாதிபதி பதவியைப் பொறுப்பேற்ற போது மகிந்த வீழ்ந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்ற மூத்த சகோதரரே மறைமுகமாக தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி உள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் சொந்த மாவட்டமான ஹம்பாந்தோட்டையின் பேலியத்தை, தங்காலை பிரதேச சபைகளிலும், தெற்கின் முக்கிய மாவட்டமான காலியின் அம்பலாங்கொட பிரதேச சபையிலும், கொழும்பின் மகரகம பிரதேச சபையிலும் வரவு செலவுத் திட்ட அறிக்கை தோல்விகண்டன.
கண்டி மாவட்டம் வலப்பனை பிரதேச சபையில் வரவுசெலவு திட்ட விவாதம் ஒத்திவைக்கப்பட்டது. இவையாவும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டுள் உள்ளவை. இந்தத் தோல்விகள் அரசாங்கத்தின் உள்ளே பாரிய நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளன.

இன்னொரு புறம் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறையில் தள்ளி அவரது அனைத்து பதக்கங்களையும் பறிமுதல் செய்து அரசியல் பழிவாங்கலை மேற்கொள்ளும் மகிந்த கோத்தபாய சகோதரர்களின் நடவடிக் தற்போது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவது. யுத்த மகா வீரனாகப் போற்றப்பட்டு இலங்கை வரலாற்றில் முதலாவது ஜெனரலாக தாமே பதவி உயர்த்திய சரத்பொன்சேகா தாக்கல் செய்த வழக்கு உயர் நீதிமன்றில் பெரும் சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றது. இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அரசியலமைப்பிற்கு உட்பட்டதா என்பதில் ஏற்கனவே முரண்பட்ட நீதியரசர்கள் சிலர் தனிப்பட்ட காரணங்களால் வழக்கில் இருந்து விலகிக் கொண்டுள்ளனர்.

முன்னர் ஒருமுறை இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில் இராணுவ நீதிமன்றின் தீர்ப்பு காட்டுச் சட்டத்திற்கு நிகரானது எனக் கூறி உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

இந்த சர்ச்சையினால் நீதிமன்ற அமர்வுகள் காலம் தாழ்த்தப்பட்டு வருகின்றன. இதனால் இப்போ ஐக்கியதேசியக் கட்சியின் ஊடாக சரத் பொன்சேகாவுடன் ஒரு உடன்பாட்டுக்குச் சென்று அவரை விடுவிக்கலாம் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகின்றது.

ஜனாதிபதியின் இரண்டாம் தவணைக்கான பதவியேற்பின் பின் இவ்வாறான தொடர் தோல்விகளைச் சந்திக்கும் மகிந்த தனது கட்சியின் உள்முரண்பாடுகளாலும் குடும்ப முரண்பாடுகளாலும் சிக்கித் தவிக்கின்றார்.

மகிந்தவின் அரசியல் முகம் என வர்ணிக்கப்பட்ட இளைய சகோதரருக்கும் மகன் நாமல் ராஜபக்ஸவுக்குமான தனிப்பட்ட மற்றும் அரசியல் முரண்பாடு அதிகரித்துச் செல்கிறது. கடந்த வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் போது நாடாளுமன்றத்திற்கும், துறைமுகத் திறப்பு விழாவின் போது ஹம்பாந்தோட்டைக்கும் பசில் ராஜபக்ச சென்றிருக்கவில்லை. கேட்டால் அமரிக்கா சென்றதாகக் கூறினார்களாம். ஆனால் வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் போது நாடாளுமன்றில் அனைவரும் சமூகமளித்திருக்க வேண்டும் என ஜனாதிபதி தனது கட்சிக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதுமட்டும் அன்றி பசில் ராஜபக்ஸவின் அமைச்சிலும் அவரது திணைக்களங்களிலும் நாமலின் நீலப்படையணியினர் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டு உள்ளனர். இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் ஆதரவு ஊடகங்கள் அனைத்தும் நாமலின் உத்தரவுகளுக்கே கட்டுப்படுகின்றன. இதனால் பசில் கடும் கோபமுற்றிருக்கிறார் என தகவல்கள் கசிந்துள்ளன.
இதனால் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களான அமைச்சர்கள் நிமால் சிறீபால டீ சில்வா, மைத்திரிபால சிறீசேன, ஜோன் செனிவிரட்ன, முன்னாள் பிரதமர் ரத்ணசிறீ விக்கிரமநாயக்கா, பௌசி ஆகியோருடன் இணைந்து இரகசிய பேச்சுவார்த்தையிலும் பசில் ஈடுபட்டுள்ளார் எனவும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மகிந்தவிடம் இருந்து பறிக்க வேண்டும் என இவர்கள் ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்னொருபுறம் ஜனாதிபதிக்கும் நாமலுக்கும் நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் துமிந்தசில்வா, மற்றும் முன்னாள் சபாநாயகர் லொக்குபண்டாரவின் மகன் உதித்த பண்டார ஆகியோர் கோத்தபாய ராஜபக்ஸவின் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் அனைத்து திணைக்களங்களங்களையும் மேற்பார்வை செய்வதற்காக நியமிக்கப்பட்டு உள்ளார்கள். இதில் விமல் வீரவன்சவின் அமைச்சு மற்றும் திணைக்களங்களும் விதிவிலக்கல்ல. இதனால் விமலும் சூடாகியுள்ளதாக தகவல்.

முன்னதாக சமல் ராஜபக்ஸவின் அமைச்சைப் பறித்து அவரைச் சபாநாயகராக நியமித்தமை மற்றும் சமலின் மகனிற்கு இருந்த முன்னுரிமைகளை பறித்தமை தொடர்பாக சமல் ராஜபக்ஸவும் அதிர்ப்தியுற்று இருந்ததாக தகவல். அதன் வெளிப்பாடே நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அண்மையில் வெளியிட்ட கருத்து எனவும் பேசப்படுகிறது.

இவை யாவற்றிற்கும் அப்பால் சிரேஸ்ட அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட பௌசி, சரத் அமுனுகம, திஸ்ஸவித்தாரண, டியூ குணசேகர உள்ளிட்ட பலரும் கடுமையான அதிர்ப்தியில் இருப்பதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன் பௌசியின் பேத்தியினது குடும்பநிகழ்வில் திடீரென கலந்து கொண்ட மகிந்த அவரைச் சமாதானப் படுத்த முனைந்ததாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு திரும்பும் இடம் எல்லாம் பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ள மகிந்தவிற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உட்பூசல் ஓரளவிற்கு முடிவுக்கு வந்தமை பேரிடியாக அமைந்துள்ளது. கட்சியின் யாப்பு நிறைவேற்றப்பட்டமை, தனது மாவட்டத்தையே பிரதிநிதித்துவம் செய்யும் தன்னை விட, நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை முன்னர் பெற்றுக் கொண்ட, மக்களின் செல்வாக்குள்ள சஜித் பிரேமதாஸாவின் எழுச்சி என்பன பெரும் தலையிடியாக உள்ளன. இதனால் தனது வாரிசை நாட்டின் தலைவராக்கும் கனவு தகர்ந்து விடுமோ என்ற அச்சம் அவரைப் பின் தொடர்கின்றது.

குறிப்பாக சஜித்தின் எழுட்சி அதனுடன் சரத்பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அர்ச்சுணா ரணதுங்க, டிரான் அலஸ் ஆகியோர் ஐக்கியதேசியக் கட்சியில் இணைவதற்கான முழுமுயற்சியில் ஈடுபட்டுள்ளமை உள்ளட்ட ஏகப்பட்ட காரணிகள் ஏக தலைவன் எனக் கர்சித்த மகிந்த ராஜபக்ஸவின் நிம்மதி தூக்கம் என அனைத்தையுமே தவிடுபொடியாக்கிவிட்டன.

இந்த நிலையில் தான், புலிகளை நிர்மூலமாக்கியதாக உலகளாவிய ரீதியில் தாமே முழக்கமிட்டுவிட்டு அந்த முழக்கத்தின் அதிர்வுகள் ஓயமுதலே புலிகளை உயிர்ப்பித்து அதுவும் மேற்குலகின் வைர எதிரிகளான இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுத இயக்கங்கள் பாதாள உலகக் குழுக்கள் என்பவற்றுடன் தொடர்புபடுத்தி மீண்டும் ஒரு அரசியல் பித்தலாட்டத்திற்கு இலங்கையின் புலனாய்வுத் தரப்பு பிராந்திய ரீதியான கூட்டு சதி முயற்சிகளை எடுத்துள்ளது.

இதன் மூலம் சர்வதேசரீதியாக எழுந்துவரும் தமக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகளையும், தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகள் தொடர்பாக உருவாகிவரும் அரசியல் ரீதியான எழுச்சிகள் மற்றும் சர்வதேச ஆதரவு அலை என்பவற்றையும் உள்நாட்டில் கட்சிக்குள்ளும், குடும்பத்துள்ளும், மக்கள் மத்தியிலும் உருவாகிவரும் எதிர்ப்புகளையும் திசைதிருப்ப முனைகிறார்கள் மகிந்தர்களும் அவர்கள்தம் பரிவாரங்களும்.
இந்த வலைப் பின்னலுக்குள் நம்மவரும் அகப்படத்தான் போறோம் என அடம்பிடித்ததால் இனி யார்தான் காப்பாற்றப் போகிறார்கள்?
- ராஜா பரமேஸ்வரி: ஜி.ரி.என்

நன்றி: சுத்துமாத்துக்கள்

பன்மொழித் திட்டம்? - உள்ளிருந்து கொல்லும் திராவிடம்!

'சிறுபான்மை மொழிச் சங்கங்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநாட்டுக் (டிச.11) கோரிக்கைகளைப் பரிவுடன் பரிசீலித்து, பள்ளிகளுக்கான சமச்சீர்க் கல்வி பாடத் திட்டத்தில், உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, அரபிக் போன்ற சிறுபான்ம மொழிகளையும் கற்பித்திட வாரத்திற்கு நான்கு பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
மொழிப் பாடங்கள் மற்றும் சிறுபான்மை மொழி வழியில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான பாடநூல்கள் தயாரிக்கப்படும். சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும். மதிப்பெண் பட்டியலில் சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கான மதிப்பெண்கள் இடம்பெறும் என்று முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.


- தினத்தந்தி 16.12.2010

ஏற்கனவே தமிழகம் பிற மொழியாளர்களின் வேட்டைக்காடாகி இருக்கிறது. அரசியல் - ஆட்சி - அறிவுத் துறைகளில் தெலுங்கர்களும், ஆட்சி - வணிகத் துறைகளில் மலையாளிகளும், வங்கி - வணிகத் துறைகளில் மார்வாடி-குஜராத்திகளும் கோலோச்சி வருவது கண்கூடு.

இந்நிலையில் சிறுபான்மை மொழிகள் என்ற பெயரில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, அரபி என்று ஐந்து மொழிகளைக் கற்பிக்கப் பள்ளிகளுக்கான சமச்சீர்க கல்வித் திட்டத்தில் வாரத்திற்கு நான்கு பாடவேளைகள் ஒதுக்கப்படும் என்றும், அவற்றுக்கான மொழிப் பாடங்கள் மட்டுமின்றி, மொழி வழியில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான பாடநூல்களும் தயாரிக்கப்படும் என்றும், அதற்கான தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் மதிப்பெண் பட்டியலிலும் இடம் பெறும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். பிற மொழிப் பாடங்கள் மட்டுமின்றி, மொழி வழியில் கற்பிக்கப்படும் பாடங்கள் என்பதையும் காண்க.

ஏற்கனவே தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் வாழும் மொழிச் சிறுபான்மையினரின் உரிமை என்ற அடிப்படையில் இன்றும் அவரவர் தாய்மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. எல்லைப் பகுதிகள் மட்டுமின்றி பிற மொழியாளர்கள் செறிவாக வாழும் பகுதிகளிலும் பிற மொழி வழிக் கல்வியா?

தமிழகத் தனியார் பள்ளிகளில் பெருமளவு தமிழ்வழிக் கல்வி கைவிடப்பட்டது மட்டுமின்றி, ஆங்கில வழியிலேயே கற்று, ஒரு மொழிப் பாடமாகக் கூட (First/Second Language) தமிழைப் படிக்காமல் முன்னகரும் இழிசூழல் நிலவுகிறது. இவ்வேளையில் இப்படி ஒரு ஆணை.

திராவிட வழித் தோன்றல்களின் அரசியல் ஆதாயத்துக்கான தமிழின முழக்கமும், உள்ளார்ந்த தமிழின ஏய்ப்பும் இன்றைய வெளிப்பாடு மட்டுமல்ல.

"நம் வீட்டில் தமிழ் பேசுகிறோம். கடிதப் போக்குவரத்து நிர்வாகம், மக்களின் பேச்சு இவைகளைத தமிழில் நடத்துகிறோம். சமயத்தை, சமய நூல்களை, இலக்கியத்தைத் தமிழில் கொண்டு இருக்கிறோமே! இதற்கு மேலும் சனியனான தமிழுக்கு என்ன வேண்டும்?"

"மொழி என்பது ஒருவர் கருத்தை ஒருவர் அறியப் பயன்படுகிறதே தவிர, வேறு எதற்குப் பயன்படுவது? இதைத் தவிர, மொழியில் வேறு என்ன இருக்கிறது? இதற்காக - தாய்மொழி என்பதும், தகப்பன் மொழி என்பதும், நாட்டு மொழி என்பதும், முன்னோர் மொழி என்பதும், மொழிப் பற்று என்பதும் ஆகியவைகளெல்லாம் எதற்கு மொழிக்குப் பொருந்துவது?"

"தமிழ்த் தாய் யாரிடமாவது அவர்களது பாலைக் கறந்து எடுத்து இரசாயன பரிசோதனை ஸ்தாபனத்தில் கொடுத்துப் பரீட்சித்துப் பார்த்தால், உடலுக்கு உரம் ஊட்டும் சாதனம் அதில் என்னென்ன இருக்கின்றது என்று கண்டுபிடித்துச் சொல்லச் சொன்னால், அப்போது தெரியும் - தாய்ப்பால் யோக்கியதை!"

"
எனது இந்தி எதிர்ப்பு என்பது இந்தி கூடாது என்பதற்கோ, தமிழ் வேண்டும் என்பதற்கோ அல்ல என்பதைத் தோழர்கள் உணரவேண்டும். மற்றெதற்கு என்றால், ஆங்கிலமே பொது மொழியாக, அரசாங்க மொழியாக, தமிழ் நாட்டு மொழியாக, தமிழன் வீட்டு மொழியாக ஆக வேண்டும் என்பதற்காகவேயாகும்."

(பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் தொகுதி2, வே.ஆனைமுத்து, திருச்சி, 1974)

என்று பகுத்தறிவூட்டிய பெரியார் காலத்திலிருந்தே வருவது.

இராஜாஜி தமிழகத்தில் இந்தியைத் திணித்த 1938இல் பெரியார் எதிர்த்தார் என்பதையே இன்று வரை பெரியாரின் இந்தி எதிர்ப்பு என்று கூக்குரலிட்டு வரும் திராவிட இயக்கங்களும், பெரியார் வழித் தமிழ்த் தேசியர்களும், 1965இல் பக்தவச்சலம் இந்தியைத் திணித்த போது அதை எதிர்த்தெழுந்த மாணவர் போராட்டத்தைப் "பார்ப்பனர்களாலும் பத்திரிகைகளாலும் தூண்டிவிடப்பட்ட போராட்டம்" என்று கொச்சைப் படுத்தியதோடு, அதனை அரசு கடுமையாக ஒடுக்கவேண்டும் என்று முன்மொழிந்தவர் பெரியார் என்பதைச் சொல்வது கிடையாது. அப்போது இந்தியைத் திணிக்கும் அரசின் செயலை பெரியார் ஆதரித்ததும், இராஜாஜி எதிர்த்ததும், முதலில் எதிர்த்த தி.மு.கழகம் பின் சற்றே பின்வாங்கியதும் வரலாறு.

நாயக்கர் காலம் தொட்டு தமிழகத்தில் குடியேறி நிலவுடைமையாளர்களாகவும், பாளையக்காரர்களாகவும், வணிகர்களாகவும், புரோகிதர்களாகவும், கோயில் அருச்சகர்களாகவும், பல கைவினைச் சாதியினராகவும் ஆகி தமிழகத்தின் நிரந்தரக் குடிகளாகிவிட்ட தெலுங்கர்களும் கன்னடர்களும் வீட்டில் தத்தம் தாய்மொழியும், வெளிச் சமூக வழக்கில் தமிழும் பேசும் இரு மொழியாளர்களாகவே உள்ளனர். தமிழ் மண்ணில் இவர்களின் சுய இருத்தலுக்கும் நில உடைமைக்கும் அரசியல் ஆதிக்கத்திற்கும் நியாயம் கற்பித்தது திராவிடச் சொல்லாடல். அதனால்தான் எத்தனை பெயரில் திராவிட இயக்கங்கள் புறப்பட்டாலும் தெலுங்கினத்தவரே கொலுவேறுகின்றனர்.

திராவிடத் தெலுங்கர் முன்னேற்றக் கழகம் கண்ட காமாட்சி நாயுடு தெலுங்கு பேசும் அனைத்து சாதியினரையும் - தெலுங்குப் பார்ப்பனர் உட்பட - திரட்டித் தமிழ்நாடு தெலுகு சம்மேளனம் அமைத்தார். கடந்த ஏப்ரலில் நடந்த மாநாட்டிற்குச் சென்னையெங்கும் சுவரொட்டிகள் தெலுங்கிலும் மிளிர்ந்தன. தலைமை கல்வித் தந்தை கெங்குசாமி நாயுடு. சிறப்புப் பங்கேற்பாளர்கள் ஆற்காடு வீராசாமி, கே.என்.நேரு, நெப்போலியன், தங்கபாலு. தமிழகத்தை அரசாளத் திராவிட அடையாளம். தங்கள் ஒற்றுமைக்குத் தெலுங்கு அடையாளம். பேச்சளவில் மட்டும் இருக்கும் தெலுங்கு பள்ளிகளிலும் வந்தால் அரசியல்படாத சாதாரண இருமொழியாளரும் முழுத் தெலுங்கராகத்தானே ஆவார்?

சித்தூர், திருப்பதி, புத்தூரை தெலுங்கரிடமும், கோலார், பெங்களூரு, கொள்ளேகாலைக் கன்னடரிடமும், பாலக்காடு, தேவிகுளம், பீர்மேட்டை மலையாளிகளிடமும் இழந்ததைத் தமிழர்கள் மறந்து விட்டனர். தமிழகத்தின் உட்பகுதியையும் இழக்க முடிவு செய்கிறார் முதல்வர்.

தமிழகம் முழுக்க வாழும் பிற மொழியாளர்களுக்கும் அவர்கள் செறிவாக வாழும் பகுதிகளில் அவரவர் தாய்மொழியைப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் பள்ளிகளிலே கொண்டு வருவது என்பது கொள்ளிக்கட்டையை எடுத்து நம் அடிமடியில் செருகிக் கொள்வதற்கு ஒப்பானது. மாணவர் நடுவில் அவ்வளவாய் இல்லாத மொழி வழி இன வேறுபாடு வடிவு கொள்ளும். பள்ளிகளுக்குள்ளும் பாளையப்பட்டுகள் உருவாகும்.

தமிழ்ப் புலவர் பட்டயம் பெற்ற பலரும் வேலை கிடைக்காமல் அவதியுறுகின்றனர். பள்ளிகளில் இடைநிலைத் தமிழாசிரியர்களே பல இடங்களில் மேனிலை வகுப்புகளுக்கும் தமிழ்ப் பாடம் எடுக்கும் அளவிற்கு மேனிலைத் தமிழாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மேனிலை வகுப்புகளில் தமிழ்மொழிப் பாடமே வாரத்தில் நான்கு பாடவேளைகள் மட்டுமே நடத்தப்படுகிறது. அதே அளவில் பிற மொழிப் பாடமும் கற்பிக்கப்படப் போகிறது!

இன்று பொதுப் பாடத் திட்டத்தில் ஐந்து பிற மொழிகள் கற்பிக்கப்படுமெனச் சொல்கிறார் முதல்வர். நாளை, தமிழகத்தில் பெருமளவில் வசிக்கும் மார்வாடி-குஜராத்தியரும் பிற வட இந்தியரும் குஜராத்தியையும் இந்தியையும் பொதுப் பாடத் திட்டத்தில் கொண்டு வரக் கோருவர். மராட்டியர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் குடியேறி, தஞ்சைப் பகுதியில் இன்றும் வாழும் (மராட்டி பிராமணர், போன்ஸ்லே, கெய்க்வாட் போன்ற) மராட்டிய இனத்தவர் மராட்டியைக் கொண்டுவரக் கோருவர். தக்காணியர் மற்றும் பல முஸ்லீம் இனத்தவரின் தாய்மொழியான் உருதுவை மட்டுமின்றி, தமிழகத்தில் பேசப்படாத அவர்களது புனித மொழியான அரபியையும் பொதுப் பாடத் திட்டத்தில் கற்பிக்கப்படும் என்கிறார் முதல்வர். நாளை இந்து மடாதிபதிகளும், இந்துத்துவ வாதிகளும் இதே அடிப்படையில் சமஸ்கிருதத்தையும் கொண்டு வரக் கோருவர். இது எங்கே போய் முடியும்?

தமிழர்களிடம் இழந்து வருகிற தம் செல்வாக்கை, பிற மொழியாளர்களைத் திருப்தி செய்வதன் ஈடுகட்ட முயலும் முதல்வரின் வாக்கு வங்கி அரசியலா இது?

மும்மொழித் திட்டத்தையே எதிர்த்துப் போராடியது தமிழகம். பன்மொழித் திட்டத்துக்கு வழிசொல்கிறதா திராவிடம்?

நன்றி: http://yuvabhaarathi.blogspot.com/
'

ஈழத் தமிழ் அகதிகள் முகாமும் தமிழர் முன்னுள்ள கடமையும்

ஒரு பெரிய குடோன். அதில் சிமிட்டிப் பைகளால் தடுக்கப்பட்ட 80 சதுரடி அளவிலான அறைகள். ஒவ்வொன்றிலும் ஒரு குடும்பம். தலைக்கு மேல் ஆஸ்பெஸ்டாஸ் கூரை. இது தமிழகத்திலுள்ள ஈழத் தமிழ் அகதிகள் முகாம் குடியிருப்பு.

மாதந்தோறும் குடும்பத் தலைவருக்கு ரூ. 400-ம், அக்குடும்பத்திலுள்ள 12 வயதுக்கு மேற்பட்ட உறுப்பினருக்கு ரூ. 288-ம், குடும்பத்தின் முதல் குழந்தைக்கு ரூ. 180-ம், மற்ற குழந்தைகளுக்கு ரூ. 90-ம் நிதியுதவி. புதிதாய்க் குடியமர்த்தப்படும் குடும்பத்திற்கு சமையல் பாத்திரங்கள் வாங்குவதற்கென ரூ. 250 உதவித் தொகை. ஈமச் சடங்குகளுக்கெனில் ரூ. 500.

முகாமை விட்டு வெளியே சென்று வர இருவர் பிணை அவசியம். 12-ஆம் வகுப்பு வரை படிக்கலாம் எனினும் பெரும்பாலும் குடும்பச் சூழல் காரணமாகவும் வெளியூர் சென்று வேலை தேட அனுமதியில்லை (காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வெளியே சென்று வர அனுமதி) என்பதாலும் இடையிலேயே படிப்பு முறிகிறது. படித்தாலும் கூலி வேலையை விட்டால் வேறு வழியில்லை. இந்நிலையிலும் முகாமைச் சேர்ந்தவர்களில் சற்றே பொருளீட்டியவர்கள் / பொருளியல் வசதி உள்ளவர்கள் கூட ஒரு சிறு துண்டு நிலம் கூட வாங்க முடியாது. ஒரு இரண்டு சக்கர மோட்டார் வாகனம் வாங்கக் கூடச் சட்டம் அனுமதிப்பதில்லை. இதுவே தமிழகத்தின் 25 மாவட்டங்களில் செயல்படுகிற 113 அரசு முகாம்களில் தங்கியுள்ள சுமார் 75,000 ஈழத் தமிழ் அகதிகளின் நிலைமை.

இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3 இந்தியாவில் பிறக்கும் குழந்தை இந்தியக் குடிமகனாகக் கருதப்பட வேண்டும் என்றது. 1986-இல் இதில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி, பெற்றோரில் ஒருவர் இந்தியராக இருக்க வேண்டும் என்கிறது. ஈழத் தமிழர் விடயத்தில் அதுவும் கூடச் சரிவரப் பின்பற்றப்படவில்லை என்பதே நிதரிசனம். 1983 கருப்பு ஜூலை இனப்படுகொலைகளுக்குப் பிறகு உயிர் பிழைத்து/பிழைக்க வேண்டித் தாய்த் தமிழகத்தில் கரையேறிய ஈழத் தமிழ் அகதிகளுக்குப் பிறந்த குழந்தைகளின் குடியுரிமை கேள்விக்குள்ளானது. குடியுரிமையற்ற நிலையில் பல உரிமைகள் மறுக்கப்படுகின்றன. கடவுச் சீட்டு பெற இயலாது என்பது மட்டுமின்றி, உலக நாடுகள் அங்கீகரித்துள்ள அகதிக்குரிய கடவுச் சீட்டும் கூட தமிழகத்தில் உள்ள இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

இதே இந்தியத் துணைக் கண்டத்தில் ஈழத் தமிழர்கள் தவிர்த்து இதர அகதிகளும் இதே முறையில்தான் நடத்தப்படுகிறார்களா என்றால் இல்லை.

ஃ ஈழத்தவர்களை விட அதிக எண்ணிக்கையில் இந்தியாவில் இருப்பது திபெத் அகதிகள். ஐ.நா.வின் அகதிகள் உயர் ஆணையத்தின் 2008 கணக்கீட்டின்படி, அவர்களது எண்ணிக்கை 1.10 இலட்சம். (அக்கணக்கீட்டின்படி முகாம்களிலும் வெளியிலும் வாழும் ஈழத் தமிழ் அகதிகள் 1.02 இலட்சம்.) திபெத் அகதிகளுக்கு அவர்களது மறுவாழ்விற்கென சொந்த நிலம் வழங்கப்படுகிறது. இந்திய நடுவண் அரசால் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் அவர்கள் ஏறத்தாழ இந்தியக் குடிமகன்களாகவே நடத்தப்படுகிறார்கள். சமீபத்தில் சீனப் பிரதமர் புதுதில்லிக்கு வந்திருந்தபோது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திபெத்தியர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததைத் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம்.

ஃ 50,000 எண்ணிக்கையிலான நேபாள அகதிகளுக்கும் பிற தடைகள் இல்லை.

ஃ ஆப்கன் அகதிகள் 32,000 பேர் இந்தியாவில் இருக்கிறார்கள். 12 ஆண்டுகளுக்கு மேல் இங்கேயே தங்கியிருக்கும் ஆப்கன் அகதிகள் தம் விருப்பத் தேர்வின் அடிப்படையில் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

ஃ இந்தியாவில் இருக்கும் 35,000 வங்கதேச அகதிகளில் சிலர் மேற்கு வங்கத்திலும் ஒரிசாவிலும் சட்டமன்ற உறுப்பினர்களாகக் கூட இருக்கின்றனர்.

அகதிகளை அணுகும் முறையிலும் இந்திய நடுவண் அரசின் இப் பாரபட்சத்தை என்னென்பது?

உலகின் பல நாடுகள் அகதிகளுக்கு தொழில் - வர்த்தக உரிமைகளை வழங்கியுள்ளன. ஆஸ்திரேலியா அகதிகளுக்கான நிதியுதவியாக மாதந்தோறும் ரூ. 40,000 வழங்குகிறது. நிரந்தரக் குடியிருப்பிற்கெனத் தொகுப்பு வீடு வழங்குகிறது. குழந்தைகளின் உயர்கல்விக்கு வசதி செய்து தருகிறது. ஐந்து ஆண்டுகள் அகதிகள் முகாமிலிருந்து நன்னடத்தைச் சான்று பெற்றவர்களுக்குப் பணி அனுமதி (Work Permit) அளித்து அவர்கள் பல்வேறு பணிவாய்ப்புகளைப் பெறவும் வாய்ப்பளிக்கிறது. இத்தகைய பணிவாய்ப்புகள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் கருதி கனடாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் மறு அகதிகளாகச் செல்ல - உயிரைப் பணயம் வைத்து மீன்பிடிப் படகுகளிலும் பயணிக்கத் - துணிகின்றனர். கடற்படையிடம் சிக்கி மேலும் அவதியுறுகின்றனர். அகதிகள் தொடர்பான ஐ.நா.வின் 1951, 1967 ஒப்பந்தங்களில் இந்தியா இன்னமும் கையொப்பமிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நம் காவல்துறை இவ்வகதிகளை அணுகும் முறையும் கொடுமையானது. அகதிகள் முகாம்களை அடுத்துள்ள கிராம/நகரக் குடியிருப்புகளில் நிகழும் திருட்டு நிகழ்வுகளுக்கு அகதிகள் முகாமில் உள்ளவர்களைப் பொறுப்பாளியாக்குவதும், அதற்கெனத் தண்டிக்கப்படுவதும் நடக்கிறது. சமயங்களில் பீடி, பெயிண்ட், விளக்கு போன்ற பொருள்களை எடுத்துச் செல்பவர்களும் கூட விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என்ற பெயரில் கைது செய்யப்படுகின்றனர். செங்கல்பட்டு, பூவிருந்தவல்லியில் உள்ள - சுற்றிலும் மின்வேலியாலும் துவக்கு தரித்த காவலர்களாலும் சூழப்பட்ட - சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதை அனுபவிக்கின்றனர்.

வாழ்வின் அடிப்படைத் தேவைகளைப் பெற அரசியல் கட்சித் தலைவர்களை அணுகுவதும் பயனளிப்பதில்லை. 1997-இல் ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, தாம் ஆட்சிக்கு வந்ததும் ஈழத் தமிழ் அகதிகளின் பயன்பாட்டிற்குத் தரிசு நிலங்களைத் தருவதாக உறுதியளித்தார். 2001-இல் ஆட்சிக்கு வந்ததும் மறந்து போனார்.

2008 ஜூலையில் சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், அகதிகள் சட்டவிரோத ஆவணங்கள் மூலம் தமிழகத்தில் சொத்து வாங்குவதாகவும் அதனால் இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவதாகவும் கவலை தெரிவித்து விவாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு காஞ்சியில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் அகதிகளுக்கான குடியுரிமைப் பிரச்சினை குறித்துப் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதாகவும் தெரிவித்தார்.

குடியுரிமை வழங்குவதைப் பொருத்த மட்டில் நடுவண் அரசால் மட்டுமே செய்யப்படக் கூடியது. ஆனால் வீடு, உயர்கல்வி, சுதந்திரமாக நடமாடவும் தொழில் - வர்த்தகத்திற்கானதும் சொத்து வாங்குவதற்குமான உரிமைகள் மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டவையே.

பட்டா நிலம் கூட வேண்டாம், சொந்த நாடு செல்லும் வரை மானத்தோடு உழைத்துப் பிழைக்க மட்டும் நிலம் தந்தாலும் போதும் என்பதே ஈழத் தமிழ் அகதிகளின் நீண்ட நாள் கோரிக்கை.

அரசாங்கம் இங்குள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு,

ஃ குடியிருக்க ஏற்ற வகையில் எல்லா அடிப்படை வசதிகளும் உள்ள தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும்.

ஃ இதர குடிமக்களைப் போலச் சுதந்திரமாக நடமாடுவதற்கும் தத்தம் வாழ்வாதாரத்திற்கெனப் பணிவாய்ப்புகளைப் பெறுவதற்குமான உரிமை வழங்க வேண்டும்.

ஃ இந்தியாவில் பிறக்கும் அவர்களது குழந்தைகளுக்கு - முன்பு போல் - இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்.

ஃ உழவுத் தொழிலில் ஈடுபட நிலம் வழங்க வேண்டும்.

ஃ மீன்பிடித் தொழிலில் இருந்தோர்க்கு அதைச் செய்ய ஏற்ற வகையில் உரிய சாதனங்கள் மற்றும் இருப்பிட வசதிகள் வழங்க வேண்டும்.

ஃ இவர்களது குழந்தைகள் பள்ளிக்கல்வி மட்டுமல்லாது உயர்கல்வி பெற வழிவகை செய்வதுடன், அதற்கென உதவித் தொகை வழங்க வேண்டும்.

ஃ சொத்துரிமை வழங்க வேண்டும்.

ஃ தொடர்ச்சியாக 7 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வோர்க்கு - அவர்களது விருப்பத் தேர்வின் அடிப்படையில் - இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்.


ஈழத்து முள்வேலியில் வதைப்படும் தமிழர்களுக்கு மட்டுமல்ல, இம்மண்ணில் - திறந்த வெளிச் சிறைகளாக உள்ள - அகதி முகாம்களில் துயருறும் ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் கண்ணியமான வாழ்விற்காகவும் அரசை வலியுறுத்த வேண்டியது ஈழ ஆதரவு அமைப்பினர் மற்றும் பல்வேறு மனித உரிமை அமைப்பினருக்கு மட்டுமின்றி இங்குள்ள தமிழர் ஒவ்வொருவருக்குமுள்ள கடமை.
 

Thursday, December 23, 2010

இந்திய உளவுத்துறையின் சூழ்ச்சிவலையை அறுத்தெறிவோம்

  பழைய உத்திகளை இவர்கள் கைவிடுவதாக இல்லை!
அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளால் நிலை தடுமாறிப் போயிருக்கும் காங்கிரசு மற்றும் தி.மு.க. கூட்டணிக்கு எதைத் தின்றால் பித்தம் தீரும் என்று அலைகிறார்கள்!
கார்கில் போராட்ட வீரர்களுக்கு ஒதுக்கிய வீடுகளை ஒதுக்கீடு செய்ததில் ஊழல், காமன்வெல்த் போட்டிகள் நடத்துவதில் ஊழல் செய்து உலக நாடுகள் முன்னால் தலைக்குனிவை ஏற்படுத்தியது அடுத்து! ஸ்பெக்ட்ரம் ஊழல் வரலாறு காணாத ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல்! கங்கை காவிரியை இணைக்க ஒரு லட்சம் கோடிதான் தேவைப்படும் என்றார்கள்! ராசாவும் மந்திரிகளும் ஏப்பம் விட்டது அதற்கும் மேலே!
வீட்டுமனைப் பட்டா ஒதுக்கீட்டில் கருணாநிதி செய்த அடுத்த ஊழல் அம்பலமானது! ராடியாவின் உரையாடல்கள் ஊடகத்தில் வந்தபோது இந்த நாட்டின் மக்களாட்சி என்பது எப்படி நாசமாகிக் கிடக்கிறது என்று அம்பலப்பட்டுவிட்டது! இப்படி நாறிப் புடை நாற்றமெடுக்கும் நிலையில், “இந்தச் சட்டமன்றத் தேர்தலும் வந்து தொலைக்கிறதே” என்று ஆட்சியாளர்களுக்கு குறிப்பாக தி.மு.க. காங்கிரசுக்குக் கவலையோ கவலை!
“மன்மோகன் சிங், சோனியா கோந்தி, கருணாநிதியை விடுதலைப்புலிகள் கொல்லச் சதி” என்று தலைப்பிட்டு ஊடகங்களை உசுப்பேத்தியது உளவுத்துறை! “சரி, யாரோயோ போட்டுத் தள்ளிவிட்டு புலிகள் மீது பழியைப் போடப் போகிறார்கள்! அந்தக் கையோட தமிழ்நாட்டில் எழுந்துவரும் தமிழின எழுச்சியின்மீதும் ஒரு ஏவுதல் படலத்தைத் தொடரலாம்” என்று போட்ட கணக்கை தமிழர்கள் சரியாகப் புரிந்து கொண்டு ஆப்பு வைத்துவிட்டார்கள்!
நினைவு இருக்கிறதா? விழுப்புரம் அருகில் தண்டவாளத்தில் குண்டு வைத்துத் தகர்த்து, அதன் அருகில் மடிப்பு கலையாத தாளைப் போட்டு, விசாரணைக்கு அதிகாரிகள் போகும் முன்னரே சென்னையிலுள்ள காவல் அதிகாரி இதில் மாவோயிஸ்டுகளுக்குத் தொடர்பு இல்லை என்று அறிக்கைவிட எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை என்கிற பாணியில் அசிங்கப்பட்டு அம்பலப்பட்டு போனது அவர்கள் காரியம்! தமிழ்த் தேசிய அமைப்புகளை ஒடுக்க இப்படி குண்டக்க மண்டக்க என்று பழைய பாணி அரசியலை புது அச்சு போட்டு உளவுத்துறை விற்கத்தான் பார்க்கிறது! ஆனால் தற்போது அது போணியாக மறுக்கிறது!
மன்மோகன்சிங், சோனியாகோந்தி, கருணாநிதி மீது விடுதலைப் புலிகள் மட்டும் அல்ல ஒட்டுமொத்தத் தமிழினமே கடும் சினம் கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். அதை உளவுத்துறையும் இந்த செய்திப் பரப்பலின் வழியாக ஒத்துக் கொண்டிருக்கிறது மகிழ்ச்சிதான்! அதைத் திசைதிருப்பும் அவர்களது முயற்சி நமநமத்துப் போனவுடன் திரைக்கதை வசன கர்த்தாவை மாற்றி இப்போது புதுச் சரடு விடுகிறார்கள்.
“போர் உச்ச கட்டத்தை நெருங்கியபோது பயங்கர ஆயுதங்களுடன் புலிகளில் பலர் தப்பி விட்டனர் என்றும் அவர்களுக்கு தாவுத் இப்ராகிம் தொடர்பு இருப்பதாகவும், அவர் உதவியுடன் பொட்டுஅம்மான் உட்பட புலிகளில் பலர் தப்பி அயல்நாடுகளுக்குப் போனதாகவும், இறுதிக்கட்டப் போருக்குப் பின்னரும் பதுங்கியிருந்த புலிகள் தப்பித்துப் போய்விட்டனர் என்றும் புதுக் கதையும் புது முடிச்சும் போடுகிறார்கள்.
விடுதலைப்புலிகள் இருக்கிறார்களா? எங்கே இருக்கிறார்கள்? என்பது உலகமே வியந்து எதிர்நோக்கியிருக்கும் வினாக்கள் என்பதில் இரு கருத்துக்களுக்கு இடமில்லை! ஆனால், அந்தச் சந்தில் சிந்து பாட உளவுத்துறை புதுக்கதை புனைந்திருப்பதற்குக் காரணம் இல்லாமலா இருக்கும்?
1. இலங்கையின் இராசபக்சே அரசு போர்க்குற்றச்சாட்டு நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது!
2, இந்தியாவின் காங்கிரசு அரசு ஊழல் குற்றச்சாட்டு நெருக்கடியில் வெந்துகொண்டிருக்கிறது!

3. தமிழ்நாட்டின் தி.மு.க அரசு ஊழல் குற்றச்சாட்டு நெருக்கடியிலும் கருணாநிதி குடும்ப அரசியல் நெருக்கடியிலும் ஊசலாடுகிறது!
4. வெங்காயமும் விலைவாசி ஏற்றமும் மக்களைக் கடுப்பின் உச்சியில் வைத்திருக்கிறது! சரத்பவார், மிகச் சாவகாசமாக, “மூன்று வாரங்கள் கழித்துத்தான் விலை இறங்கும்” என்கிறார்.
5. விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தும் செய்திகள், ராடியா உரையாடல் பதிவுகள், மத்தியப் புலனாய்வுத் துறையின் திடீர் செயற்பாடுகள் போன்றன மக்கள் மனதில் தீவிரக் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது!
6. இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழரின் தனிநாட்டுக் போராட்டம் என்பது ஞாயமானதே என்று உலக நாடுகள்
உணரத் தொடங்கியிருக்கின்றன! தமிழ்நாட்டுக்குள் திராவிட இந்திய எதிர்ப்பு என்பது கால்கொள்ளத் தொடங்கிவிட்டது!
ஒரே கல்லில் இந்த ஆறு மாங்காய்களையும் அடிக்க உளவுத்துறை தலையைப் பிய்த்துக் கொள்கிறது! இத்தனைக் கிடுக்கிப் பிடியிலிருந்தும் இந்தக் கட்சிகளையும் தனிமாந்தர்களையும் விடுவிக்க வேண்டுமானால் மிகப் பயங்கரமான ஒரு கொலையையோ, குண்டுவெடிப்பையோ அல்லது மிகுந்த அதிர்ச்சியூட்டக்கூடிய நிகழ்வையோ நடத்தினால்தான் மக்களைத் திசை திருப்ப முடியும் என்பது இவர்களின் கணக்கு!
இனி பொது அறிவுக்கு சில எளிய வினாக்களைத் தொடுப்போம்!

ஒட்டு மொத்தத் தமிழினமும் விடுதலைப் புலிகளின் போராட்டக் காரணங்களை இன்று ஏற்று ஆதரிக்கிற நிலையில் புலிகள் வன்முறை வழியில் அதிரடி செய்து ஆதரவை இழக்க விரும்புவார்களா? அவ்வளவு அறிவு கெட்டவர்களா அவர்கள்?
இன்று உலக நாடுகள் பல விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும், தமிழரின் வாழ்வுரிமை, அவர்களின் தனியாட்சி உரிமை, தமிழருக்கு எதிரான சிங்களப் பேரினவாதம் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்து வருகிற சூழுலில் ஆயுத வழிப் பாதைக்குத் திடுதிப்பென்று திரும்புவார்களா?
சிங்கள இனவெறியர்களின் போர் வெறித் தாண்டவம் என்பது உலக வரலாற்றில் மிகப் பெரிய கொடூரமான மாந்த உரிமை மீறல் என்று உலகே இன்று அதிர்ந்து, புரிந்து வரும் நிலையில் விடுதலைப் புலிகள் அதைக் கெடுக்கும் விதமாக வன்முறைப் பாதையில் இறங்குவார்களா?
சிங்கள இந்திய திராவிடக் கூட்டு தமிழருக்கு எதிராக மாபெரும் தவறுகளையும் மிகப்பெரியப் போர்க்குற்றங்களையும் இழைத்துவிட்டு இன்று அதன் விளைவுகளை அறுக்கத் தொடங்கியிருக்கிறது! இதை புலிகள் கெடுக்க விரும்புவார்களா?
“அறத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்! அறமே வெல்லும்” என்பது முதியோர் வாக்கு!
உலகெங்கும் வாழும் தமிழர்கள் விழிப்படையவேண்டும்! உளவுத்துறையின் சூழ்ச்சி வலைகளை அறுத்தெரியுங்கள்! நம்மவர் நல்லவர் அனைவரிடமும் உண்மைகளைச் சொல்லி எச்சரித்து வையுங்கள்!

தமிழர்களம்

Wednesday, December 22, 2010

இந்திய உளவுத்துறையின் சதியின் பின்னணியில் நடப்பவை என்ன?

  இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஏராளமான விடுதலைப்புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளார்களா? என இந்தியப் புலனாய்வு அமைப்பின் விசாரணைகளை மேற்கொள்ளத்தொடங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது.
ஏற்கெனவே சில நாட்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளால் இந்திய தலைவர்களுக்கு ஆபத்து என்று செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் இந்தச் செய்தி வெளிவிடப்பட்டதன் உள்நோக்கத்தை மக்களுக்கு சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்டதன் விளைவால் அச்செய்தி வெளியிட்டோரின் நோக்கம் நிறைவேறாமல் போகும் நிலையில் அடுத்த செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

அதற்கு பாவிக்கப்பட்டிருக்கும் பெயர்தான் தாவூத் இப்ராகிம் குழுவினர்.

தப்பிச் சென்றவர்கள் பெருந்தொகையான ஆயுதங்களையும் தம்முடன் எடுத்துச் சென்றதாகவும் அக்கால கட்டத்தில் புலிகளுக்கு ஆயுதம் விநியோகித்த தாவூத் இப்ராஹிம் குழுவினர் இந்தியப் புலனாய்வு விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். தாவூத் இப்ராஹிம் குழுவின் முக்கிய புள்ளியான மிர்ஸா பெய்க் இடம் நடாத்தப்பட்ட விசாரணைகளிலிருந்தே மேற்படி தகவல்கள் வெளிவந்துள்ளன.

யுத்தம் நிறைவுற்ற பின்னரும் கூட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் தலைமறைவாக இருந்து விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பியிருப்பதாகவும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மிர்சா பெக்கிடமிருந்து பொட்டம்மான் பற்றிய தகவல்களையும் பெற்றுக்கொள்வது தொடர்பான விசாரணைகளை இந்தியப் புலனாய்வுத்துறை மேற்கொண்டுள்ள போதிலும், அவற்றின் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. விடுதலைப் புலிகளின் வலையமைப்பு தொடர்பாக அவர் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ள போதிலும், பாதுகாப்புக் கருதி அவற்றை வெளியிட முடியாதுள்ளதாக மும்பைப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. என அச்செய்தி தொடர்ந்து செல்கின்றது.

தற்போது இந்தியாவில் இருந்து வெளிவிடப்பட்டிருக்கும் இச்செய்தியின் உள்நோக்கம் பற்றி மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டிய அவசியம் பொறுப்புள்ள ஊடகங்களுக்கு இருக்கின்றது.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மௌனித்தன் பின்னர் நெடுநாட்களாக யார் யார் உயிருடன் இருக்கின்றார்கள் எங்கெங்கு இருக்கின்றார்கள் என்ற கேள்விகளுக்கு பதில் பெறமுடியாமல் தமிழ் மக்களும் எதிரிகளும் திக்குமுக்காடியிருப்பது என்னவோ உண்மைதான்.

ஆனால் அதன் நோக்கங்களையும் ஆழ அகல பரிமாணங்களைம் ஆத்மார்த்தமாக உணர்ந்திருக்கும் தமிழினம் தனது அரசியல் இராஐதந்திர ஐனநாயக வழிப்போராட்டங்களை தீவிரப்படுத்தி முன்னகர்ந்து செல்கின்றது. ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த மௌனத்திலும் கால இடைவெளியிலும் ஒரு துப்பாக்கி ரவைகூட பாவிக்கப்படக்கூடாது என்பதில் தமிழர் தரப்பு தெளிவாகவே இருக்கின்றது.

இதுவே இன்று சிங்களத்திற்கும் எதிரிகளிற்கும் பெரும் சவாலாக அமைந்திருக்கின்றது. தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இன அழிப்பும் அதில் கைநனைத்தவர்களும் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் தமிழ் மக்களிற்கான தார்மீக ஆதரவு சர்வதேச ரீதியாக பெருகிவரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் எதிர்காலத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடைகள் நீக்கப்பட்டு தமிழர்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை பெற்றுவிடுவார்கள் என்ற ஐயம் இலங்கை அரசிற்கும் இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் ஏற்பட்டுள்ளது.

இதனை முறியடிக்கும் தமது வேலையை வழமைபோல அவர்கள் ஆரம்பித்து விட்டார்கள். அதன் வெளிப்பாடுகள் தான் அண்மையில் வந்திருக்கும் கீழ்க்குறிப்பிட்ட இரு செய்திகளும்.
விடுதலைப் புலிகள் ஆயுதங்களுடன் தப்பிச்சென்றாதால் அவர்கள் எந்நேரமும் ஆயுதத்தாக்குதலில் ஈடுபடலாம். அவர்களுக்கும் தீவிரவாத குழுக்களுக்கும் தொடர்பிருப்பதால்? அவர்களை பயங்கரவாதிகளாக மேலும் சித்தரிக்கலாம். படிப்படியாக இந்திய பல்லின சமூகத்தின் ஆதரவை தமிழர்கள் பெறுவதற்கான தேவை உணரப்பட்டு அதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவில் வாழும் அனைத்து மக்களாலும் அச்சத்துடன் நோக்கப்படும் தாவூத் இப்ராஹிம் குழுவினருடன் தொடர்புபடுத்தி தமிழர்களின் நோக்கத்தை சிதறடித்தல்" என பல்நோக்கம் கொண்டு திட்டம் தீட்டப்பட்டு காட்சிகள் அரங்கேற ஆயத்தமாகின்றது. இதன் தொடர்ச்சியாக இலங்கையிலும் இந்தியாவிலும் சில அல்லது பல குண்டுகளும் வெடிக்கலாம். சில முக்கியஸ்தர்கள் கூட கொள்ளப்படலாம். அவற்றை விடுதலைப்புலிகளே செய்தார்கள் என தங்களால் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கும் சாட்சிகள் கொண்டு ஆதாரப்படுத்தக் கூட முனையலாம். எதுவும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காட்சிகள் காலத்திற்கேற்றவாறு மெருகூட்டப்படுவது வழமையே. நீளும் காட்சியில் இப்போது தாவூத் இப்ராஹிம் குழுவினர் சாட்சிகளாக...

மக்களை உசுப்பேத்தும் தலையங்கங்களை போட்டு எதிரிகளின் வலையில் நாங்கள் விழுவதுடன் மக்களையும் விழவைத்து விடாமல் பொறுப்புடனும் ஒற்றுமையுடனும் நாம் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும்.

விடுதலைப் புலிகளின் தாரக மந்திரங்களில் முக்கியமானது “ சொல்லுக்கு முன் செயல்” . செயல் எது என மானமுள்ள மானசீகமான தமிழன் ஒவ்வொருவனுக்கும் தெரியும். பொது எதிரியையும் அவன் திட்டங்களையும் முறியடிப்போம். மௌனங்களிற்கும் ஆத்மார்த்தமான கேள்விகளுக்கும் காலம் தமிழர் பெருமைகொள்ளத்தக்க பதிலை நிச்சயம்

நன்றி: http://www.tharavu.com/

Tuesday, December 21, 2010

சிந்திப்பாயா சீமானே?

நாம் தமிழர் இயக்கம்”
 
திராவிடத்தின் கடைசிச் சாவடி!
 
தமிழின விடுதலைப் பாதையில்தான் எத்தனைச் சறுக்கல்கள்!  எத்தனைக் குறுக்குச்சால்கள்!  எத்தனைக் குளறுபடிகள்!  எத்தனை நயவஞ்சக நாசகாரச் செயல்கள்!!
 
முள்ளிவாய்க்காலில் நடந்த கோரம்தான் இந்தியம், திராவிடம் ஆகிய இருபெரும் நாசகாரச் சக்திகளின் முகத்திரைகளை முற்றாகக் கிழித்துப் போட்டது!  தமிழினத்தைப் பீடித்துள்ள கொடுநோயின் கோர வெளிப்பாடுகளில் ஒன்றுதான் முள்ளிவாய்க்கால் கொடூரம்!  தமிழருக்குக் கண்டுள்ள நோய் இந்தியம், திராவிடம் என்னும் கொடுநோய்கள்!
 
“நோய்நாடி நோய்முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்றார் வள்ளுவர்.  நோயின் மூலத்தை அறிந்து குணமாக்கு என்பது அவரது அறிவுரை!  ஈழத்தில், பர்மாவில், மலேசியாவில், கர்நாடகத்தில், தமிழகத்தில் நடக்கும் கொலைகள், நசுக்கல்கள், போர், ஒடுக்குமுறை ஆகியனவற்றின் மூலம் திராவிடம் இந்தியம் என்ற கொடுநோய்களில் இருக்கிறது!  ஒரு காலத்தில் இந்திய நோயைத் தீர்க்க நாம் நம்பி எடுத்த நச்சு மருந்து திராவிடம்!  அதுவே இன்று ஓர் இனத்தின் உயிர்க்கொல்லி நோயாக மாறி நிற்கிறது!
 
தமிழகத்தின் அரசியல் முதல் கலை பண்பாடுவரை வடுக வந்தேறிகளின் கொற்றம் இன்று கொடிகட்டிப் பறக்கிறது!  கேட்க நாதியின்றி வந்தேறிகள் அடிக்கும் கொள்ளை, வளைக்கும் நிலங்கள், பறிக்கும் அதிகாரம் தமிழரைக் குலை நடுங்க வைக்கிறது! 
 
இந்நேரத்தில் வந்தது நாம் தமிழர் இயக்கம்!
மறைந்த திரு. ஆதித்தனார் அவர்களின் முன்னெடுப்பால் ஒருகாலத்தில் தோன்றுவிக்கப்பட்ட நாம் தமிழர் இயக்கம் அகண்ட தமிழகம் பற்றிப் பேசியது!  ஈழம், இழந்த பகுதிகள் உள்ளடக்கிய தமிழகம் என்று முன்மொழிந்தார் திரு. ஆதித்தனார்!  ஆனால், திராவிடக் கட்சிகளின் நெருக்கடிகளுக்கு நடுவில் அந்த நாம் தமிழர் இயக்கம் மெல்ல மறைந்து போனது!
 
“தமிழ், தமிழர்” என்று மேடைகளில் பேசி ஈர்த்த திராவிட இயக்கங்கள்தான் இனித் தமிழரைக் காப்பாற்றப் போகிறது என்ற நம்பிக்கையில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தி.க., தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. என்று வரிசையாக அணிவகுத்தத் திராவிடக் கட்சிகளில் போய் சேர்ந்தார்கள்!  உதட்டில் தமிழ்பேசி ஈர்த்த இந்த கட்சிகளுக்குள் இழுக்கப்பட்ட தமிழர்கள் உள்ளே வந்தபோது ஓராயிரம் தேள்கள் ஒருங்கே கொட்டியதுபோல அதிர்ந்தார்கள்!  தலைமையெல்லாம் தெலுங்கர், கன்னடர், மலையாளிகளிடம் இருந்தன!  அவர்கள் வைத்ததே சட்டம்!  போட்டதே வட்டம்! என்ற நிலையே இருந்தது!  தமிழர்கள் தொண்டர்களாக, எடுபிடிகளாக, கொடிபிடிப்பவர்களாக, குற்றேவல் புரிபவர்களாக சிதைந்து கிடப்பதைக் கண்டார்கள்.  ஆனால், மளமளவென ஆட்சி அதிகாரத்தை பிடித்துக் கொண்ட அவ்வந்தேறிகள் தமிழர்கள் மீதான பிடியை இறுக்கினார்கள்!
 
கருணாநிதி, எம்.ஜி.ஆர், வீரமணி, பெரியார், செயலலிதா, விசயகாந்து, வைகோ, ஆற்காட்டு வீராச்சாமி, வேலு, நேரு, நெப்போலியன் என்று சாரைசாரையாக வந்தவர்கள் அனைவருமே வந்தேறிகள் என்ற அதிர்ச்சி தமிழர்களை உறைய வைத்தது!
 
தமிழினத்தைச் சீரழித்தவர்களும், சீரழிக்கத் துணைபோனவர்களும் இவர்களே!  அதன் உச்சமே முள்ளிவாய்க்கால்!  ஆனால் தலைமை வழிபாட்டு அரசியலில் சிக்கித் தவித்தவர்களுக்கு ஒட்டுமொத்த இனத்தைவிட ஒரு சில வழிபாட்டு உருவங்களே முதன்மையாகிப் போயின!
இந்தக் காலத்தில் திரு. சீமான் தலைமையில் மீண்டும் தோன்றிய நாம் தமிழர் இயக்கம் தமிழ் மக்கள் நடுவில் நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தியது!  ஆனால், இதை வழிநடத்தும் சீமான் ஒரு தமிழராக இருந்த போதிலும் திராவிட இயக்கத்தின் நரகல் கொள்கையில் சில காலம் புரண்டவரே இவர்!  ஈழம் சென்று தலைவரைச் சந்தித்தவர் என்கிற ஒரு பெருமை, திரைத்துறைப் பின்புலம், ஆவேசப் பேச்சு ஆகியன இளைஞர்களுக்கு அவர்பால் ஓர் ஈர்ப்பை உண்டுபண்ணியது!
 
திராவிடப் பின்னணியிலிருந்து வந்திருந்தாலும் மெல்ல மெல்ல தமிழர் தேசிய அரசியலுக்கு அவர் வந்துவிடுவார் என்ற முழு நம்பிக்கையில் இருந்தோம் நாம்!
 
தமிழ்த் தேசிய அரசியலைப் பேசினாலும் மலையாளத் தெலுங்கு கன்னட எதிர்ப்பை அவ்வப்போது முறுக்கேறிய விதமாகப் பேசினாலும் அவர் எடுத்த படங்களில் என்னவோ மலையாளிகளுக்கும் மற்றவர்களுக்கும்தான் முன்னுரிமை கொடுத்தார்! நெருடலாய்த்தான் இருந்தது!  விட்டுத் தள்ளினோம்.
இலங்கை சென்று படம் எடுத்தவனை உதைப்பேன், மறுப்பேன், தடுப்பேன் என்ற அளவிற்குப் பேசியவர் “ரத்தச் சரித்திரம்” வந்தபோது பம்மிக் கொண்டது ஏன்?  என்ன புரிதல்? யாருடன் புரிதல்? விளங்கவில்லை.
சிங்களனை அடிப்பேன் என்று சொன்னதற்காக ஐந்து மாதச் சிறை!  ஐந்து மாதத்தில் ஆறுமுறை தமிழனைச் சிங்களன் அடித்தான்!  வெளிவந்தபிறகு, “இன்னும் உரக்கச் சொல்லுகிறேன், சிங்களனை அடிப்பேன்” என்கிறார். எப்போது?
 
சிங்களனை அடிக்க ஆறு கோடித் தமிழரும் துடித்துக் கொண்டு இருக்கின்றனர்!  ஆனால், திராவிட அரசு நெம்பி நொங்கு எடுத்துவிடுமே!  திராவிடத்தை ஒழித்தால்தான் சிங்கள எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு என்பதெல்லாம் எடுபடும்.  அன்றேன், இன்னும் உரக்க உரக்க சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான், அடியையும் வாங்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்!
 
அரசியற்படுத்தப்படாத அப்பாவித் தமிழ் இளைஞர்கள் தமிழின ஓர்மை கொண்டு வரும்போது அவர்களுக்கு அப்பட்டமாக “ராமசாமி நாயக்கர்தான் தமிழ்த்தேசியத் தந்தை” என்று அறிமுகப்படுத்துவதில் கருணாநிதிக்கும் இவருக்கும் என்ன வேற்றுமை?  சரி, அதுதான் போய்த் தொலைகிறது என்று பார்த்தால்,
கட்சியின் அனைத்து மட்டங்களிலும் தெலுங்கர்களின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது.  தெலுங்கச்சி சரஸ்வதி, திருச்சி வேலுச்சாமி உள்ளிட்ட பல மாவட்டத் தலைவர்களும் தெலுங்கரே என்பது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி!  எப்படி திராவிடக் கட்சிகள் தமிழ் தமிழர் என்று உதட்டளவில் பேசி நடைமுறையில் அன்னியர் ஆதிக்கத்தைத் திணித்ததோ அதையேதான் அச்சு அடித்தாற்போல நாம் தமிழர் இயக்கத்தின் சீமான் செய்திருக்கிறார்! கட்சிக்குள் அப்பட்டமாக சுபவீயின் ஆட்கள் சுங்கான் இயக்குகிறார்கள்.  கே.என்.நேருவின் நேரடி வழிகாட்டுதலில் வந்தவர்கள் குந்தியிருக்கிறார்கள்.  கருணாநிதியின் காலடிவருடிகள் இருக்கிறார்கள்!  “திராவிடப் பித்தலாட்டங்கள்” வகைதொகையில்லாமல் திரிகின்றன! எப்படி இவர்கள் வந்தார்கள்?
 
திராவிடம் என்கிற நரகல் கொள்கையை வகைதொகையில்லாமல் உண்டு களித்ததன் விளைவே இது!  கட்சி தமிழருக்கானது! தலைமை தெலுங்கருக்கானது!! என்றால், இதை நாம் தமிழர் இயக்கம் என்று ஏன் அழைக்க வேண்டும்?  பேசாமல் நாம் திராவிடர் என்றோ, நாம் தெலுங்கர் என்றோ அழைத்துவிடலாமே!  மீண்டும் தமிழர்கள் கொடி பிடிக்க, வசூலிக்க, சுவரொட்டி ஒட்ட, தொண்டாற்ற பிறகு வழித்துத் துடைத்துப் போட என்கிற நிலைக்கு வந்துவிட்டதே!
 
எல்லாமே இழந்து விட்டோம்! இனி எவனுக்கும் நாம் சமரசம் ஆகப்போவதில்லை!  இன்னும் இந்தத் திராவிட மலத்தைச் சுமக்க தமிழன் என்ன இளிச்சவாயனா?  சீமான் அவர்களே, கட்சியிலிருந்து அன்னியரை வெளியேற்று! வந்தேறி எதிர்ப்பை முன்னிறுத்து!
ஈழத் தமிழனையும் இங்குள்ள தமிழனையும் காவுகொடுக்கக் காரணமான திராவிடத்தை நாம் தமிழருக்குள் கொலுவேற்றி வைத்திருப்பது மாவீரர் கல்லறையில் நீங்கள் மலத்தை அள்ளி வைப்பதற்குச் சமம்!   மலம் உங்களுக்குச் சந்தனம் போல மணக்கலாம்!  அள்ளி அள்ளி பூசிக் கொள்ளுங்கள்!  ஆனால், திராவிட நரகலுக்கு தமிழ்நாட்டில் இனியும் கடைவிரிக்க தமிழனின் பேரைச் சொல்லி ஏமாற்றாதீர்கள்!
தமிழனை ஏமாற்ற பெரியார் செய்த உருமறைப்பு முடிந்தது!  பின்னர் கழகங்கள் செய்த உருமறைப்பு முடிந்தது! அண்மையில் சிறுத்தை செய்த உருமறைப்பும் கிழிந்தது! இனி உங்களதுதான் கடைசி உருமறைப்போ!
 
உங்களுக்கும் கருணாநிதிக்கும் வீரமணிக்கும், சுபவீக்கும், பெரியார்தான் தந்தை என்றால், பாவேந்தர் பாணியில் நாங்கள் உங்களைக் கேட்க வேண்டியிருக்கிறது, “தாய் உன்னை யாருக்குப் பெற்றாள் கூறு!”  நீங்களெல்லாம் திராவிடர்கள் என்றால் அடித்துச் சொல்வோம், நாங்கள் தமிழர்கள்! தமிழர்கள்! என்று!!

குமுறலுடன்
பொன்னேரி தாசன்